Header Ads



முஸ்லிம்களின் நிலைப்பாட்டுக்கு, BBS மட்டற்ற மகிழ்ச்சி


(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)

புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டாலோ அல்லது திருத்தங்கள் மேற்கொண்டாலோ ஐக்கிய இலங்கையே முஸ்லிம்களின் நிலைப்பாடு என முஸ்லிம் தரப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளதுடன், இதுதொடர்பில் பகிரங்க அறிக்கையொன்றை வெளியிடவும் தீர்மானித்துள்ளது.

பொதுபல சேனா முஸ்லிம் தரப்பு 5 ஆவது சுற்றுப் பேச்சில் (நவம்பர் 2 ஆம் திகதி, வியாழக்கிழமை இரவு) முக்கிய கலந்துரையாடலாக இரு அமைந்திருந்தது.

ஐக்கிய இலங்கைக்குள், ஒற்றையாட்சி முறையே என முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக இதன்போது முஸ்லிம் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

இதன்போது குறிக்கிட்ட பொதுபல சேனா, முஸ்லிம்களின் நிiலைப்பாட்டை பகிரங்கப்படுத்த முடியுமா என இதன்போது கேள்வியெழுப்பியுள்ளது.

இதற்கு பதில் வழங்கியுள்ள முஸ்லிம் தரப்பு, சகல முஸ்லிம்களினதும் நிலைப்பாடு இதுவே என்றும் ஏனைய முஸ்லிம் அமைப்புக்களையும்  இணைத்துக்கொண்டு தாம் இதுபற்றிய விரிவான அறிக்கையை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளது.

முஸ்லிம் தரப்பின் ஐக்கிய இலங்கை மற்றும், ஒற்றையாட்சி என்ற அறிவிப்பை கேட்டவுடன் பொதுபல சேனா தரப்பு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தாகவும் அறியவருகிறது.

9 comments:

  1. நாடு பூராவிலும் 25000 க்கும் குரைவான ஆதரவாளர்களை கொண்டுள்ள ஒரு இனவாதக்கட்சியை திருப்தி படுத்திய மட்டற்ற மகிழ்ச்சியில் சமூகத்தின் தலைவர்கள்(?)நமது உரிமையெல்லாம் வென்றெடுக்கப்பட்ட மகிழ்ச்சியில் தொண்டர்களும் சமூகமும் ......தமது கடமை மறந்து தாம் பெரும் ஊதியத்திற்கு புரிய வேண்டிய பணிஅறியாத நிலையில் தம்மை தலைவர்களாகவும் அழைப்பாளர்களாகவும் கூறிக்கொள்ளும் இவர்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டால் .....1915 இல் ஆரம்பித்த இனவாதம் இன்று வரை வளர்ச்சி அடைந்து வருகிறது ஆனால் ஆண்ட்ரூ முதல் மாற்று சமூகங்களினால் எம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை ...இஸ்லாத்தின் தூதை எவரும் அறியச்செய்வதில் எந்தப்பங்களிப்பும் இல்லை ஹலால் ஹராம் பற்றிய விளக்கம் வழங்கப்பட வில்லை இஸ்லாமியப் பெண்களின் உரிமைகள் பற்றிய விளக்கம்,ஷரியா என்றால் என்ன ? உடை பற்றிய விளக்கம் ,இஸ்லாம் கல்விக்கு அழைக்கும் விதம் உட்பட எந்த விதமான இஸ்லாம் பற்றிய விளக்கம் வழங்கப்படவும் இல்லை வழங்கும் அளவிற்கு வளவாலர்களை உருவாக்கவுமில்லை ....தமது சூரத்தினால் மக்களை கவர்தவர்கள் மார்க்க அறிவினாலும் சமூக நடைமுறையை அறிந்தவர்களாகவும் இப்பணியை கையில் எடுத்திருந்தால் இப்பிரச்சினை தோன்றி இருக்க வாய்ப்பே இராது ..அழைப்புப் பணிக்கு அல்குரான் மற்றும் நபிகளாரின் வாழ்வியல் மற்றும் உலகியல் அறிவு அவசியம் என்றிருக்க இன்று தேவைப்படுவது ஒரு ஜுப்பாவும் தஸ்பீஹும் மிஸ்வாக்கும் என்றாகிவிட்ட நிலையில் இச்சமூகத்தை பாதுகாக்க இவ்வாறு எதிரியில் காலில் விழுவதை விட வழி ஏது?

    ReplyDelete
    Replies
    1. Please be understand.
      Miswaq not a small matter brother.this is very important sunnah of rashool (sal)one battle won by miswaq.we are very lazy to follow the sunnah.
      Thats what our ummah facing lots of problem.and insult our society.

      Delete
    2. 250became 25000 recism.like cancer.not a easy group.remind you

      Delete
  2. நல்லது நடந்தால் சரி.. பொல்ல கொடுத்து அடி வாங்கிய கதையாகாமல் பார்த்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. This is the attempt of the YAHAPALANAYA as they have to get the support of the Muslims for the local government election. Anyway we as Muslims have to encourage this move if it is done with good intention and with good heart.

    It is nothing new to Muslims as Islam teach us about Hudaibiya Pact

    ReplyDelete
  4. நடப்பது நல்லதாகவே தெரிகிறது.
    கவனமாக கையாளுங்கள்.
    இலங்கையின் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின்
    பாதுகாப்பை
    உரிமைகளை
    தேவைகளை
    முன்னிருத்தி நீங்கள் ஒரு சிறு கூட்டமாவது அர்ப்பணிப்புடன் தைரியமாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
    எமது சமூகத்தின் பெரும்பாலோரிடமிருந்து பாராட்டை எதிர் பார்க்காதீர்கள்.
    காலைப்பிடித்து இழுத்து விட சமூகத்தின் இன்னொரு கூட்டம் சமயம் பார்த்திருக்கும், கவனமாக இருங்கள்...
    வெற்றி பெற துஆக்கள்

    ReplyDelete
  5. காபிர்களை உங்களை பற்றி திருப்தி அடையமாட்டார்கள் எதுவரையெனில் உங்களை உங்கள் மார்க்கத்தில் இருந்து வெளியேற்றி அவர்களது மதத்தை நீங்கள் பின்பற்றும் வரை

    ReplyDelete
  6. 'பொதுபல சேனா' சிரிய குழுவாக இருந்தாலும்
    அவர்களை திருப்திக் படுத்த வேண்டுமென்பதற்காக
    அல்ல இந்த முயற்சி என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் இதுவரை நடந்து கொண்ட விதங்களைகப் பார்க்கும் போது, அவர்களுடன் நேரடியாகப் பேசி பிரச்சினைகளை ஆராய்வதில் தவறில்லை..!

    அரசாங்கமே அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அச்சப்படும் போது, அந்த அரசாங்கம் நமது மக்களைக் காப்பாற்றுவார்கள் என்று எப்படி நம்புவது..?

    அதனால் இப்படியொரு துணிகரமான முயற்சியைப்
    பாராட்டவே வேண்டும்.

    அப்படி இல்லை என்றால்,
    தினம் தினம் நமது சமூகம் இனவாதக் குழுக்களின் அச்சுறுத்தலுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்துக் கொண்டு நிம்மதியை இழக்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.

    கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 23 பேரும் கையொப்பமிட்டு அரச மேலிடத்துக்கு தேரரைக் கைது செய்யும்படி மகஜர்
    கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை எனும்போது அதற்கு மேலும் எதுவும் நடக்குமா..? என்பது சிந்திப்பதற்குப் போதுமானது.

    இவர்கள் மட்டுமல்ல தினம் தினம் புதிய புதிய பெயர்களில்
    இனவாதக் குழுக்கள் உருவாகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இப்படியொரு தூர நோக்கமுல்ல முயற்சி காலத்தின் கட்டாயமும் கூட என்பதில் ஐயமில்லை..!

    ஒன்றை அவதானியுங்கள்,
    இந்தப் பேச்சுவார்த்தைகள்
    ஆரம்பித்ததில் இருந்து இதுவரை எந்த ஒரு இனவாதக் குழுக்களின் அச்சுறுத்தல்களோ
    அறிக்கைகள் விடுவதோ அசம்பாவிதங்களோ நடைபெறவில்லை என்பதிலிருந்து, 'அமைதி' பேணப்படுவதிலிருந்து
    ஏதோ ஒரு நன்மை நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனேகர் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

    இது வரவேற்கப்பட வேண்டியதும், பாராட்டப்பட வேண்டியதுமான விடயம்
    என்று ஏற்றுக்கொள்ளலாம்..!!

    ReplyDelete
  7. Well said brother jubaideen

    ReplyDelete

Powered by Blogger.