Header Ads



செல்வாக்கை இழந்த ஜனாதிபதி, தனித்துப் போட்டியிட்டால் 6 லட்சம் வாக்குகளை பெறுவார்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம் செய்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் முன்வைத்த விளக்கத்தை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதோடு, தமது புதிய கட்சியான பொதுஜன பெரமுண கட்சியின் வலையமைப்பை பலப்படுத்துமாறும் கட்சி முக்கியஸ்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த பொதுத் தேர்தலின் போது சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரைப் பயன்படுத்தியே வெற்றி பெற்றார்கள்.

எனினும் தற்போதைக்கு பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிராமிய மட்டத்தில் தமது செல்வாக்கை இழந்துள்ளதுடன் இதன் காரணமாக தனித்துப் போட்டியிட்டால் வெறும் ஆறு லட்சம் வாக்குகளை மட்டுமே பெறும் சாத்தியம் காணப்படுகின்றது.

இந்த நிலைமையில் மீண்டுமொரு தடவை மஹிந்தவைப் பயன்படுத்திக் கரைசேர ஜனாதிபதி தரப்பு தந்திரமாக காய் நகர்த்துகின்றது.

அத்துடன் தற்போதைக்கு தமது தரப்பின் செல்வாக்கின்மையை மறைக்க கூட்டு எதிர்க்கட்சிக்கு சாதகமற்ற அதே ​நேரம் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மட்டும் முதற்கட்டமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

எனினும் பொதுமக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் வகையில் எந்தவொரு இடத்திலும் போட்டியிட கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதுடன், சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதில்லை என்றும் உறுதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் சுதந்திரக் கட்சியுடனான கலந்துரையாடல்களை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது தரப்பின் முக்கியஸ்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

2 comments:

  1. Good Move; UNP is happy; My3 is out.

    ReplyDelete
  2. யார் யாரெல்லாம் முஸ்லீம்களுக்கு அநியாயம் செய்தார்களோ அவர்கள் அனைவரும் - அதற்கான தன்டனையை அனுபவித்துக்கொன்டிருக்கிறார்கள் - மகந்தவும் அவர்களில் ஒருவர்.

    ஆனாலும் மைத்திரி முஸ்லீமகளுக்குச் செய்வது துரோகம் - அதற்கான தன்டனை ஆரம்பத்துவிட்டது போல்................ சாவுடா.............

    ReplyDelete

Powered by Blogger.