ஒரே நாளில் 5 புதிய சாதனைகள் படைத்த இலங்கை வீரர்
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அரைசதம் அடித்த இலங்கை பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 5 புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
இலங்கை- இந்தியா இடையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 172 ஓட்டங்கள் எடுக்க, இலங்கை 294 ஓட்டங்கள் எடுத்தது.
நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியில் 67 ஓட்டங்கள் அடித்த இலங்கை வீரர் ரங்கன ஒரேநாளில் பேட்டிங்கில் 5 புதிய சாதனைகள் படைத்தார்.
முதல்தர போட்டிகளில் சதம் அடிக்காமலேயே அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர் ரங்கன தான், இதுவரை 5000 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இந்திய மண்ணில் அந்த அணிக்கு எதிராக அதிக வயதில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடம்பிடித்தார்.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் 1500 ஓட்டங்கள் மற்றும் 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமை கிடைத்துள்ளது.
இந்திய மண்ணில் 8-வது அல்லது அதற்கு அடுத்த வீரராக களமிறங்கி அதிக வயதில் அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரங்கன முதலிடம் பிடித்தார்.
இந்திய மண்ணில் விளையாடிய வெளிநாட்டு அணி வீரர்களில் அதிக வயதில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
Post a Comment