கொழும்புத் துறைமுகத்தில், இந்தியக் கடற்படையின் 3 போர்க் கப்பல்கள்
இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நல்லெண்ண மற்றும் பயிற்சிப் பயணமாக இன்று -02- கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்தியக் கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான திர், சுஜாதா ஆகியனவும், இந்தியக் கடலோரக் காவல்படையின் சாரதி என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலுமே, கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.
இவை ஐந்து நாட்கள் இங்கு தரித்து நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் போது இந்தக் கப்பல்கள், சிறிலங்கா கடற்படைக் கப்பல்களுடன் இணைந்து, பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.
அத்துடன் சமூக சேவைகளிலும் விளையாட்டுக்களிலும் இந்திய கடற்படையினர் ஈடுபடவுள்ளனர்.
Post a Comment