Header Ads



மஹிந்தவை சந்தித்த, 2 முஸ்லிம் அமைச்சர்கள்

அரசாங்கத்தின் பிரபல முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இரு அமைச்சர்களில் ஒருவர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் என்பதுடன் முஸ்லிம் அரசியல் கட்சி ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், மற்றைய அமைச்சர் அரசாங்கத்தின் ஓர் இராஜாங்க அமைச்சராக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சர்கள் தாம் வகிக்கும் அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் ஆசனம்பெறுவது தொடர்பிலும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியிருப்பதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(டெய்லி சிலோன்)

1 comment:

  1. Don't call this mahinda as ex president.call him MP.

    ReplyDelete

Powered by Blogger.