முஸ்லிம்களுக்கு எதிரான, ஆர்ப்பாட்டம் தடுக்கப்பட்டது - 2 பேர் கைது
சிங்கள - முஸ்லிம் சமூகங்களுக்கிடையே இனவாதத்தைத் தூண்டும் விதமாக செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நாவலப்பிட்டிய பொலிஸார் இருவரை கைது செய்துள்ளதுடன் மேலும் இரு நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
நாவலப்பிட்டி நகரில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் முச்சந்தியில் சில நலன்விரும்பிகள் இணைந்து வழிகாட்டி குறியீட்டுடன் கூடிய சுவாமியின் (சமன்தெய்யோ) உருவப்படம் அடங்கிய பதாகையினை செய்திருந்தனர். அப் பதாகையினை சில தினங்களுக்கு முன்னர் விஷமிகள் கிழித்து எறிந்துள்ளனர். மேற்குறித்த சம்பவத்தினை இப்பகுதி முஸ்லிம்களே செய்துள்ளதாக கூறி ஒரு குழுவினர் வதந்தியை கிளப்பிவிட்டதுடன் அதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றினையும் மேற்கொள்ள ஆயத்தங்கள் செய்திருந்தனர்.
இதனால் இப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டதோடு பொலிஸாரும் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதன்போது, மேற்படி சம்பவம் தொட ர்பாக நாவலப்பிட்டிபொலிஸார் மேற்கொண்ட புலன் விசாரணைகளிலிருந்து குறித்த சம்பவத்தினை பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேரே நிறைந்த மது வெறியில் தெய்வத்தின் உருவம் என்றுகூட தெரியாமல் கிழித்து எறிந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரில் இருவரை கைது செய்து நாவலப்பிட்டி நீதிமன்ற நீதவான் ஸ்ரீநித் விஜேசேகர முன்னிலையில் கடந்த 7 ஆம் திகதி ஆஜர்ப்படுத்தியபோது குறித்த நபர்களை இன்று வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இருவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தும்படியும் நீதிவான் உத்த ரவிட்டார்.
Put them all One year in Jail or more....
ReplyDelete