Header Ads



சவூதியின் தாக்குதலில் யேமனில் 26 பேர் மரணம், வேண்டுமென்றே தாக்கவில்லை என விளக்கம்


சௌதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹூதி கிளர்ச்சியாளர்களிள் வலுவிடமான ஏமனின் வட மாகாணமான சாதாவில், குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஏமனில் இருந்து வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஹார் மாவட்டத்தில் ஒரு ஹோட்டலையும், மக்கள் நெரிசல் மிகுந்த சந்தையையும் பாதித்த இந்த வான் தாக்குதல், உருக்குலைந்த உலோகங்களின் குவியலாக அந்த இடத்தை மாற்றியுள்ளது.

இந்த உள்நாட்டு போரில் ஏமன் அரசுக்கு ஆதரவு வழங்கும் சௌதி தலைமையிலான கூட்டுப்படை சந்தைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் நடத்தியுள்ள தாக்குதல்கள் மூலம் மக்கள் பலரின் உயிரை பலிவாங்கியுள்ளது.
ஆனால் மக்களை வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்கவில்லை என்கிறது சௌதி கூட்டுப்படை.

No comments

Powered by Blogger.