25 பாதாள உலக முக்கியஸ்தர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்
நாடளாவிய ரீதியில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட 25 பேர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் தேடுதல் வேட்டை மற்றும் எதிர் பாதாள குழுவினரால் ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே இவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக பாதாள உலக செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், முக்கியமான பாதாள உலக தலைவர்கள் பலர் நாட்டைவிட்டு தப்பிச் சென்றிருந்த போதும் அவர்களது சகாக்கள் ஊடாக இங்கு குழு மோதல்களை ஏற்படுத்தி வருகின்றமை தெரியவந்துள்ள நிலையிலேயே அடையாளம் காணப்பட்டுள்ள பல பாதாள உலக தலைவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் ஊடாக சிவப்பு அறிவித்தல்களைப் பெற்றுக்கொள்ள பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
(எம்.எப்.எம்.பஸீர்)
Post a Comment