24 மாநகர, 41 நகர, 276 பிரதேச சபைகளுக்கு தேர்தல் - 8,356 உறுப்பினர்கள் தெரிவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க 4,840 தொகுதிகள் வகுக்கப்பட்டுள்ளதுடன், 341 உள்ளூராட்சிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு 8,356 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
இதேவேளை இறுதியாக விகிதாசார முறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாட்டில் முன்னூற்று முப்பத்தைந்து உள்ளூராட்சி மன்றங்கள் இருந்ததுடன் அம் மன்றங்களுக்கு நான்காயிரத்து நானூற்று எண்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
ஆகவே புதிய தேர்தல் முறை ஊடாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கடந்த தேர்தலைவிட ஆறு உள்ளூராட்சி மன்றங்கள் மேலதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன.
அதற்கிணங்க அகரப்பத்தனை, கொட்டகலை, மஸ்கெலியா, நோர்வூட், பொலன்னறுவை ஆகிய பிரதேச சபைளும் பொலன்னறுவை மாநகர சபையுமே புதிய உள்ளூராட்சி மன்றங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே தற்போது நாட்டில் மொத்தமாக இருநூற்று எழுபத்தாறு பிரதேச சபைகளும், 24 மாநகர சபைகளும், நாற்பத்தொரு நகரசபைகளுமாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்த வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
(எம்.சி.நஜிமுதீன்)
Post a Comment