20 ஓவர் போட்டியில் கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி சாதனை
பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் 20 ஓவர் தொடரில், லாகூர் ஒயிட்ஸ் அணிக்காக கம்ரான் அக்மல், சல்மான் பட் விளையாடினர். இஸ்லாமாபாத் அணிக்கு எதிராக களம் இறங்கிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தனர். இதன் மூலமாக கடந்த ஆகஸ்ட் மாதம் கெண்ட் அணியின் ஜோ டென்லி மற்றும் டேனியல் பெல்-ட்ரம்மண்ட் இணை குவித்த 207 ரன்கள் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
அதிரடியில் வெளுத்து வாங்கிய கம்ரான் அக்மல் 71 பந்துகளில், 12 சிக்சர்கள் மற்றும் 14 பவுண்டரிகளுடன் 150 ரன்கள் குவித்தார். சல்மான் பட் 49 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.
பின்னர், ஆடிய இஸ்லாமாபாத் அணி 100 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சர்வதேச 20 ஓவர் போட்டியில், இந்தியாவின் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் இணை முதல் விக்கெட்டுக்கு குவித்த 158 ஒட்டங்களே சாதனையாக உள்ளது.
Post a Comment