Header Ads



இலங்கை முஸ்லிம்களின், வாழ்வுரிமை பிரகடனம் - 2017


புதிய அரசியல் யாப்பு மாற்றத்தையோ, வடகிழக்கு இணைப்பையோ முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. – வாழ்வுரிமை மாநாட்டில் பிரகடனம்.

இலங்கை நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பே சிறந்தது. நாட்டிற்கு மீண்டுமொரு யாப்பு தேவையில்லை, தற்போது வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், வடகிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்றைய தினம் 26.11.2017 ஞாயிற்றுக் கிழமை முஸ்லிம்களின் மாபெரும் வாழ்வுரிமை மாநாடு கொழும்பு, வைட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்த குறித்த மாநாட்டில் அமைப்பின் செயலாளர் A.G ஹிஷாம் MISc மக்கள் மனம் கவரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அமைப்பின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் வாழ்வதற்கு உரிமை வேண்டும் என்ற தலைப்பில் தமிழ் மொழியிலும், அமைப்பின் பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்கள் சிங்கள மொழியிலும் சிறப்புரையாற்றினார்கள்.

ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. கபீர் DISc அவர்கள் மாநாட்டு பிரகடனத்தை வெளியிட்டு வைத்தார்.

குறித்த பிரகடனத்தில்

★ உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் திருத்த சட்ட மூலம் உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும்.

★ 100% விகிதாசார முறைப்படியே உள்ளுராட்சி, மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

★ புதிய இடைக்கால அறிக்கையை இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

★ இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பு எதுவும் தேவையில்லை. தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பே போதுமானது.

★ வடகிழக்கு இணைப்பை இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

★ மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்குவதை ஒரு போதும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதுடன் பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்குவது என்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

★ முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசியல் வாதிகளின் கருத்துக்களை மாத்திரம் நம்பியிராது, உண்மையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்னவென்பதை ஜனாதிபதியவர்கள் ஆராய்ந்து பார்க வேண்டும். குறிப்பாக ஜமாதிபதியவர்களை சந்திப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பல முறை கடிதம் மூலம் அனுமதி கேட்டும் இதுவரை எவ்வித அனுமதியும் தரப்படவில்லை. ஜனாதிபதியவர்கள் தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுடன் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் சந்திப்புக்கு நேரம் தர வேண்டும் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டது.

★ முஸ்லிம்களின் உரிமைகளை பரிக்கும் விதமாக கொண்டுவரப்படும் இதுபோன்ற தீர்மானங்களுக்கு எதிராகவே இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் போன்ற பல பிரகடனங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸான் DISc அவர்களின் நன்றியுரையுடன் மாநாடு சிறப்பாக முடிவுற்றது.

13 comments:

  1. தமிழர்களுக்கு எதிராக, இப்படியான இனவாத பிரகடனங்கள் செய்தால், சிங்களவர்கள் அடிக்க-குட்ட மாட்டார்கள் , முன்னர் போன்று பணம்-பதவிகள்-சிறு சலுகைகள் தருவார்கள் என்று நிணைத்து விட்டார்கள்.

    பாவம். அந்த காலம் மலையேறிவிட்டது.
    எனி புதுசா ஏதாவது யோசிங்கோ!

    ReplyDelete
  2. @Anthony, this is not against any race. SlTJ is an Islamic organisation and it can take any resolutions for the betterment of their community. Likewise, TNA or Northern CM can have his own resolutions for his community.

    ReplyDelete
  3. Mr SLTJ,

    It happened to me to read your Proclamation of Livelihood of Muslims of Sri Lanka- 2017 and I would like to correct you as follow.

    You have mentioned in your Proclamation that the ethnic composition of the Eastern Province is Tamils 39% and Muslims 37%. According to your statement Tamils are the majority which is absolutely wrong. According to the census report of 2012 of the census Department of Sri Lanka, Muslims are the majority community in the Eastern Province. The ethnic compositions in the Eastern Province is given below.

    Muslims - 37.12%
    Hindus - 34.78%
    Buddhists- 22.87%
    Christians- 5.21%
    Others - 0.02%

    Please refrain from exposing the Muslim community by making false statements.

    ReplyDelete
    Replies
    1. Mashaallah yes thank your stament pls forward also sltj and carry on your social work for muslims Allah help us.allahuakbar

      Delete
    2. I am talking about the single majority and the census report issued by Census Department in 2012.

      Delete
  4. தூய்மையான எண்ணத்துடனும் - துணிகரமான முன்னெடுப்புகளுடனும் அல்லாஹ்வின் திருப்பதியை நாடி தமது செயற்பாடுகளை மேற்கொன்டுவரும் SLTJ அமைப்பினர் - குறுகிய நோக்கங்களுக்காக கூப்பாடு போடும் எவரைக் கண்டும் யாரைக் கன்டும் அஞ்சத் தேவையில்லலை -

    உங்களுக்கப் பின்னால் அல்லாஹ்வை மாத்திரம் அஞசக்கூடிய ஆயிரக்கணக்கான எம்மைப் போன்றவர்கள் அணிதிரன்டுள்ளனர். இன்சா அல்லாஹ் முன்னேறுவோம் துணிவுடன் தொடர்ந்தும் இன்சா அல்லாஹ்...................

    ReplyDelete
  5. இலங்கை முஸ்லிம்களில் ஒரு சதவீதமானவர்கள் கூட இவர்களின் (SLTJ)கருத்தை ஆதரிப்பதில்லை, முதலில் சூனியம் உண்டு என நம்புபவர்களை முஸ்லிம்களாக ஏற்றுக்கொள்கிறீர்களா என கேட்டுச் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இஸ்லாத்தை நம்புங் பிலதர்!
      ஏற்ப சூனியக்காரனை நப்புரீங்?
      குர்ஆன் ஹதிதை மட்டும் பின்பற்றினால்தான் நீங்க அபு ஷீனா இல்லாட்டி வெறும் அப்பா சீனா தான்

      Delete
  6. SLTJ FOLLOWING THE GHOTA GUIDEWAY.SLTJ RUNNING BY MONEY AND BACKING BY GOTHAPAYA .

    ReplyDelete
    Replies
    1. புன்னீக்கு நீயும் செய்ய மாட்டா? தள்ளியும் படுக்கமீட்டாய்

      Delete
  7. Dear zeena, anyone who believe in "Soonyam" can not be considered as a real Muslim. Don't blame on SLTJ.

    ReplyDelete
  8. சஹீஹான ஹதீஸ்கள் சூனியம் உண்டு என்ற விடயம் வந்துள்ளது. ஏழு பெரும்பாவங்களுள் ஒன்றாக சூனியத்தை கூறியுள்ளார்கள். அப்படி இருக்க sltj அமைப்பினர் சூனியம் என்ற ஒன்று இல்லை என்பதோடு அவர்கள் அமைப்பினர் அல்லாதவர்களுக்கு பின் நின்று தொழ மறுக்கின்றனர். அவர்களது எண்ணம் ஏனையவர்கள் சிர்க்கான நம்பிக்கையில் உள்ளனர் அவர்கள் பின் நின்று தொழ முடியாது என்பதே. சூனியத்தை பொறுத்தவரை அதனால் சுயமாக தீங்கை ஏற்படுத்த முடியும் என நம்புவதும் அதனை செய்வதும்தான் ஷிர்க்கே அன்றி சூனியம் என்ற ஒன்று உள்ளது என உண்மைப்படுத்துவது ஷிர்க் ஆகாது. சைத்தான் தீங்கானவன்தான் அதற்காக அவன் இருக்கிறான் என்பதை உண்மைப்படுத்துவது ஷிர்க் ஆக முடியாதல்லவா? ஆனால் சூனியம் உண்டு என உண்மைப்படுத்துவதற்கும் அதன் மீது ஈமான் கொள்வதற்குமிடையிலான வேறுபாடு புரியாத sltj வினர் அடுத்த முஸ்லிம்களை அடிப்படையில் ஷிர்க்வாதிகளாக சித்தரிக்கும் இவர்கள் எப்படி மற்ற விடயங்களில் முஸ்லிம் கோசத்தை முன்வைப்பது என்பதுதான் எனது கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.