Header Ads



கண் கலங்கவைக்கும் சம்பவம் - 10 வயது சிறுமியின் ஆசையும், அவலமும்..!!

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவிற்கு வந்த சிறுமி ஒருவர் பெண் பொறுப்பதிகாரியிடம் “மாமி எனக்கு பாடசாலைக்கு செல்ல பிடிக்கும். பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் அப்பா அடிக்கிறார். நான் புலமைப் பரிசில் பரீட்சை எழுதினேன் அன்றிலிருந்து நான் பாடசாலைக்கு போகவே இல்லை….. பாடசாலை சீருடை கிழிந்து விட்டது.சப்பாத்து இரண்டும் பிய்ந்து விட்டது எழுத்து எழுத என்னிடம் கொப்பிகள் இல்லை அம்மாவிடம் கேட்டால் பணம் இல்லை என்கிறார்” என தனது பிஞ்சுக் குரலில் கூறியுள்ளார்.

கவிஷ்கா கல்ஹாரி எனும் 10 வயதுடைய சிறுமியே சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவின் பெண் பொறுப்பாதிகாரியிடம் இவ்வாறு கூறி தந்தையிடமிருந்து பணம் பெற்றுத் தருமாறு கோரியுள்ளார்.

போதைப் பொருட்களுக்கடிமையாகிய கவிஷ்காவின் தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து அதிலிருந்து பெரும் பணத்தை மது மற்றும் போதைப் பொருட்களுக்கு செலவிடுவதாகவும் கவிஷ்காவின் தாயார் தெரிவித்தார்.

சிறுவர் மற்றும் மகளிர் விவாகார அதிகாரிகளின் கண்களை கலங்க வைத்த கவிஷ்காவின் நிலை 10 வயது சிறுமி ஒருவரால் தாங்கிக் கொள்ள முடியாத கொடுமையாகும்.

கவிஷ்கா தனது கதையை பொலிஸ் நிலையத்தில் கூறுகையில் 

“அப்பா வீட்டுக்கு வருவதில்லை அதனால் எங்களுக்கு சாப்பிட கொடுப்பதற்காக அம்மா வீட்டு வேலைக்கு காலையில் மாலையில் தான் வீட்டிற்கு வருவார். பெரும்பாலும் எங்களுக்கு மதியம் சாப்பிட எதுவும் இருப்பதில்லை. பசி ஏற்படும் போதெல்லாம் தண்ணீர் குடித்து விட்டு தான் நானும் எனது அக்காவும் இருப்போம்” 

கவிஷ்காவின் 16 வயது சகோதரி பஸ் சாரதி ஒருவரினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு 6 மாத கர்ப்பிணி.

தனது பிஞ்சி வயதில் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் கவிஷ்காவின் குடும்ப சூழ்நிலையை மேம்படுத்துவதற்கும் அடிப்படைத் தேவையான கல்வியை வழங்குவதற்கும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவனர் அப் பிரதேச கிராம அதிகாரியின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.