ஸ்மார்ட் போன், ஏற்படுத்திய விளைவு (உண்மைச் சம்பவம்)
~அ(z)ஸ்ஹான் ஹனீபா~
ஓர் பணக்கார இஸ்லாமிய குடும்பத்தினர் தனது செல்லமான ஒரே மகளுடன் மிகவும் சந்தோசமாகவும், பாசமாகவும் வாழ்ந்து வந்தனர், ஒரே மகள் எனும் காரணத்தால் அவள் கேட்கும் அனைத்தையும் பெற்றோர் மும்முரத்தோடு வாங்கிக் கொடுத்தனர்.
பொருட்களை வாங்கிக் கொடுத்து மகளை சந்தோசப்படுத்திய பெற்றோர் அவள் என்ன செய்கின்றாள் என்பதை அவதானிக்க மறந்துவிட்டனர், அவ்வாறு பெற்றோர் வாங்கிக் கொடுத்த பொருட்களில் Smart Phone ம் ஒன்று. Phone ஐ வாங்கிக் கொடுக்கும் போது தமக்கு இதனால் பாரிய இடியொன்று வரவிருக்கின்றது என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை இப்பெற்றார்.
மகள் Phoneஐ பயன்படுத்த ஆரம்பித்து, பழகி, பரீட்சயமடைந்து அதிலே லயித்தும் போய் அவளுக்கு வெளித் தொடர்புகளும் ஏற்பட ஆரம்பிக்கின்றன, அத்தொடரில் ஓர் ஆணுடன் தன்னை முழுமையாக தொடர்புபடுத்திக் கொண்டு பெற்றோருக்கு வெளியில் நல்லவளாக தன்னை காண்பித்த படி நாட்களை கடத்துகிறாள், கால ஓட்டத்தில் தொடர்பு முத்தவே காதலாக பரிமாணம் பெற ஆரம்பிக்கிறது, காதல் அறிவையும் கண்களையும் மறைப்பது உண்மை என்பதை இந்நிகழ்வும் நிதர்சனமாக்கிவிட்டது.
சில ஆண்கள் பெண்களை எவ்வாறாவது கவர்ந்துவிட வேண்டும் எனும் இள வயது துடிப்பில் அவாவுடன் அலைவர், அவ்வாறு அலைந்த ஓர் இளைஞனது காதல் வளையில் இப்பிள்ளையும் மாட்டிக் கொள்கிறாள், Smart Phone இன் மூலம் ஏற்பட்ட காதல் பெற்றோரை அவமதித்து அவர்களைப் புறக்கணித்து தனித்து காதலுடன் வீட்டைவிட்டு ஓடத் தூண்டுகிறது, ஒரு நாள் முழுவதும் செல்லமான தமது மகளைக் காணவில்லையே என செல்வந்த பெற்றோர் அங்கலாய்த்து தேட ஆரம்பிக்கின்றனர், பிறகு தான் தெரியும் தாம் வாங்கிக் கொடுத்த Smart Phone தான் இவை அனைத்திற்கும் காரணம் என்பதைப் புரிந்து கொண்டு தலையில் கைகளை வைத்த வண்ணம் அழுது புழம்பி துடிக்கின்றனர்.
அத்தோடு மட்டும் நின்றுவிடாது, மற்றுமொரு பயங்கர குண்டொன்றும் காத்திருந்தது, அது தான் அந்த செல்ல மகள் காதலித்து தற்போது ஒன்றாக உல்லாசமாக தனியே அவளுடன் இருக்கும் காதலன் ஓர் இந்து மதத்தைத் சேர்ந்தவன் (அல்லாஹ் பாதுகாப்பானாக), அதுமட்டுமல்லாது பெற்றோர் மகளுக்கு call எடுத்து "எம்முடன் வந்துவிடு" என்றழைக்க அவள் " எனக்கு என் காதலனை திருமணம் முடித்து தந்தால் தான் வருவேன், நீங்கள் மறுப்பீர்கள் என்று தெரியும் ஆதலால் நான் அவருடனே இருந்து கொள்கிறேன்" என்று மறுத்தாள். இதனால் பெரிதும் கவலையுற்று தாம் பொத்திப் பொத்தி வளர்த்த தமது ஒரே செல்லமான மகளை இழந்து கவலையுற்று காலத்தைக் கழிக்கின்றனர் இப்பெற்றோர்.
படிப்பினைகள்
1. ஒரே செல்லமான மகள்/மகன் என்பதனால் Smart Phones/ Laptops/ I Pads/Tablets போன்றவற்றை குறிப்பிட்ட Maturityஆன வயத்துக்கு முன் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்
2. அவ்வாறு தான் வாங்கிக் கொடுத்தால் அவர்களது நடவடிக்கைகளை பெற்றோரது கன்காணிப்பின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்
3. அனைத்துக்கும் முதன்மையாக பெற்றோர் மேற்குறித்த சாதனங்களை உபயோகிப்பது பற்றி நன்கு தெரிந்திருத்தல் வேண்டும்
4. பெற்றோர், தேவைக்கு மாத்திரம் மேற்குறித்த சாதனங்களை பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு தேவை முடிந்ததும் பிள்ளைகளிடமிருந்து வாங்கி வைத்தல் வேண்டும்
5. Games கள் விளையாடுவதற்கு மேற்குறித்த சாதனங்களை தவிர்த்து, வெளியில் பிள்ளைகளுக்கு உடற்பயிற்சிகளை வழங்கும் விளையாட்டுக்களை ஆர்வமூட்டி, அவற்றில் ஈடுபட வைத்தல் வேண்டும், அத்தோடு அறிவுசார்ந்த விடயங்களில் ஈடுபடுத்தல் வேண்டும்.
இவற்றை சரியாக முறையாக செய்யாது, தனது மகனுக்கு/மகளுக்கு இந்த சிறு வயதிலே அனைத்து மின்னியல் சாதனங்களும், தொழில்நுட்பங்களும் உபயோகிக்கத் தெரியும் என்ற சந்தோசத்தில் அவர்களை கவனிக்காது பாராமுகமாக இருக்கும் பட்சத்தில் ஈற்றில் கவலையடைந்து கைசேதப்பட்டு துடதுடிப்பது பெற்றோராகத் தான் இருக்கும்.
(அல்லாஹ் பாதுகாப்பானாக)
பிள்ளைகளைப் பெற்றால் அவர்களை ஒழுங்காக வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமையாக இருப்பத்தோடு அப்பிள்ளைகள் இறைவனளித்த அமானிதங்கள், எனவே அவற்றை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு வாழ்வோம்.
இந்து என்றால் கேவலமா? ஏன் இந்த மதவெறி?
ReplyDeleteRemember Gujarat massacre?
Deleteஅல்ஹம்துலில்லாஹ்(எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே)ஒரு போதும் கேவலமில்லை...கண்ணியத்தைத்தவிர
Deleteஆனால், இஸ்லாத்தில் முஸ்லிமல்லாத ஓர் ஆணையோ அல்லது பெண்னையோ அவர்கள் இஸ்லாத்தை ஏற்றாலே அன்றி திருமணம் முடிக்க முடியாது என்பது அல்லாஹ்வின் கட்டளை.
#அல்லாஹ் அல்குர்ஆனில் அதனைப் பின்வருமாறு கூறுகிறான்(சூரா பகரா2:221)
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.
#உங்களுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்
எந்த இஸ்லாத்தை பின்பற்றாத காபீரையும் முஸ்லீம்கள் எற்கமாட்டோம்.
DeleteHindu word derived from the Arabic word al-hindh. Real name is sanaathana dharma. Mr. Nilavan you also born as Muslim but your parents & environment change you as a Hindu.
ReplyDelete