NFGG நடாத்திய பகிரங்க பொதுக்கூட்டம்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நடாத்திய பகிரங்க பொதுக்கூட்டம் நேற்று (02.10.2017) காத்தான்குடியில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதான வீதி, முஹ்ஸின் மௌலானா சதுக்கத்தில் இரவு 08.00 மணி முதல் நடை பெற்ற இப்பொதுக் கூட்டம் NFGG யின் தேசிய அமைப்பாளர் MBM. பிர்தௌஸ் நழீமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட், பிரதித் தவிசாளர் சிராஜ் மசூர் ஆகியோர் விசேட உரைகளை ஆற்றினர்.
இலங்கைக்கான புதிய யாப்புருவாக்க நடவடிக்கைகள் பற்றிய தெளிவான விளக்கம் ஒன்றினை நஜாமுஹம்மட் தனதுரையில் வழங்கினார்.
கூட்டத்தில் இறுதியாக உரையாற்றிய பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் 20 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை தேர்தல் திருத்தம் என்பவற்றின் உள்ளடக்கம் அதன் அரசியல் தாக்கங்கள், அவ்விடயங்களில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் நடந்து கொண்ட விதம் என்பன தொடர்பில் தெளிவுரைகளை வழங்கினார்.
அத்தோடு, புதிய யாப்புருவாக்கம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை மற்றும் அதில் முஸ்லிம்கள் பிரதான கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சங்களான பாராளுமன்ற தேர்தல் திருத்தம் மாகாண சபைகளுக்கான அரசியல் பகிர்வு மற்றும் வட கிழக்கு இணைப்பு தொடர்பான விடயங்களிலும் விரிவான தெளிவுரைகளை வழங்கினார்.
NFGGயினர் ஏறாவூர் பிரதேச செயற்குழு உறுப்பினர் MLM.ஷுஹைல் ஆசிரியர் , திருகோணமலை செயற்குழு உறுப்பினர் MRM.பஸ்லி உட்பட NFGGயின் காத்தான்குடி பிராந்திய ஆலோசனை சபை உறுப்பினர்கள் மற்றும் ஏறாவூர், திருகோணமலை செயற்குழு உறுப்பினர்கள் பொது மக்கள் என ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Post a Comment