மக்களைப் பிரித்து விட்டேன், மன்னித்து விடுங்கள் - உருகிய பேஸ்புக் நிறுவனர்
தான் உருவாக்கிய சமூக வலைதள கட்டமைப்பான பேஸ்புக் மூலம் மக்களைப் பிரித்து விட்டதற்காக தன்னை மன்னிக்குமாறு, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யூதர்களின் வருடாந்திர புனித தினமான 'யோம் கிப்புர்' இந்த ஆண்டு நேற்று ஞாயிறன்று கொண்டாடப்பட்டது. அதனை ஒட்டி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தனது தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:
நம்முன் கடந்து போன ஒரு வருடத்தைப் பிரதிபலிக்கும் அதே நேரத்தில், நமது தவறுகளுக்கு மன்னிப்பினைக் கோரி நிற்கிறோம். அவ்வாறு இந்த வருடத்தில்நான் யாரை எல்லாம் வருத்தப்படுத்தி இருக்கின்றேனோ அவர்களிடம் மன்னிப்பினைக் கோருகிறேன். என்னை மேம்படுத்திக் கொண்டு சரியாகச் செயல்பட முயற்சிக்கிறேன்.
நான் உருவாக்கிய சமூக வலைதள கட்டமைப்பான பேஸ்புக் மற்றும் அதன் செயல்பாடுகள் மூலம் பெரும்பாலும் மக்களைப் சேர்ப்பதற்குப் பதிலாக பிரித்து விட்ட தருணமே நிகழ்ந்திருக்கிறது. அதற்காக எனது மன்னிப்பினைக் கோருகிறேன். என்னை மேம்படுத்திக் கொண்டு சரியாகச் செயல்பட முயற்சிக்கிறேன் வரும் வருடமானது நம் அனைவருக்கும்சிறப்பான ஒன்றாக அமையும். வாழ்க்கையில் சிறப்பான இடத்தினை அடைவீர்கள்.
இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு துவக்கத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் பொழுது ரஷ்ய நாட்டினைச் சேர்ந்த விளம்பரங்கள் பேஸ்புக்கில் இடம் பெற்றது தொடர்பாக அதிபர் ட்ரம்ப்பும், அவருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று லிபரல் கட்சியினரும் தொடர்ந்து மார்க் ஸக்கர்பெர்க் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரிகள் முன்பு பேஸ்புக் தொடர்ந்து ஆதாரங்களை சமர்ப்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment