Header Ads



வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு - பிரான்ஸில் மாபெரும் ஒன்றுகூடல்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்  

அஸ்ஸலாமு அலைக்கும்"

இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் இலங்கை வடமாகணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்படு குறுகிய கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின்   27 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூர்வதுடன் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமகாலத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள்  மற்றும் அவர்களின் எதிர்கால வளமான வாழ்கைக்கான வாழிகாட்டுதலையும் அதே போல்*இலங்கை மக்களின் உரிமையை பாதுகாத்தல்  *இலங்கை சிறுபான்மை இனமான நாம் ஏனைய சக இன சமூகத்துடன் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தல்  சமூகங்களுடன் எவ்வாறு சகோதரத்துவமாக வாழ வேண்டும் எம் சமூகத்திற்கு ஏதிராக கட்டவிழ்தப்படும் சதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் *முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் சகோதர பரஸ்பர அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தல்.  மிக குறிப்பாக இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமை மிக்க பலமான ஒரு குடையின் கீழ் கட்டுக்கோப்பான சமூகமாக வாழ வேண்டும் என்றாரோக்கியமான தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற உள்ளது.

இதில் பிரதம, முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொள்ள விருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக இந்நிகழ்வில் சகல நாட்டு இலங்கை மக்களும், ஜே எம் சி அமைப்பின் உயர்பீட உருப்பினர்கள், ஆலோசனை குழுவினர் மற்றும் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறும் சகல இலங்கை மக்களையும் அழைத்து வருமாறு மிகத்தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம்.

விஷேடமாக பல புதிய மாற்றங்களுடன் ,புதுப் பொலிவுடன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான அமைப்பின் வருடாந்த மத்திய குழு கூட்டமும் இடம்பெறவுள்ளது. இதிலும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நேரம்:- 17-30 - 20-30

காலம்:-29  OCTOBER  2017

இடம்:- UFB center, 91 av Paul Vaillant Couturier , La Courneuve.


( JAFFNA MUSLIM COMMUNITY INTERNATIONAL )

தலைமை பணியகம், France 

No comments

Powered by Blogger.