புதிய அரசியல் அமைப்பினை நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்கப்படாது - மஹிந்த
புதிய அரசியல் அமைப்பினை நிறைவேற்றிக் கொள்ள இடமளிக்கப்படாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு வார இறுதி பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கு அமைய புதிய அரசியல் அமைப்பின் வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
உத்தேச புதிய அரசியல் அமைப்பினை தோற்கடிப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சியினால் மூன்று செயற்குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளன.
போராட்டங்கள், மக்களை தெளிவுபடுத்துதல் மற்றும் ஏனைய எதிர்ப்பு நடவடிக்கைகள் இந்தக் குழுவின் ஊடாக மேற்கொள்ளப்படும்.
மஹிந்தானந்த அலுத்கமகே, உதய கம்மன்பில மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் இந்தக் குழுக்களின் அழைப்பாளர் பதவிகளை வகிக்கின்றனர்.
நாடு தழுவிய ரீதியில் தெளிவுபடுத்தும் கருத்தரங்குகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment