இலங்கையின் சில பகுதிகளில் இரவுநேர குளிர் - ஒருவர் மரணம்
ஏறாவூர், மயிலம்பாவெளியிப் பகுதியில் நேற்று (17) இரவு நிலவிய கடும் குளிர் காரணமாக, வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவமத்தில் மயிலம்பாவெளி, முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த, சதாசிவம் பாக்கியம் தவசி என்ற,69 வயதுடையப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த வயோதிபப் பெண்ணின் நிலைமையை அறிந்த உறவினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்றப்போது, ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தவகையில், இவ்வாண்டின் பருவ மழை துவக்க காலத்தில், குளிர் தாங்க முடியாமல் இடம்பெற்ற முதலாவது மரணம் இதுவென மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பிலுள்ள பல பிரதேசங்களில் நேற்று (17) நண்பகலிருந்து, கடும் குளிரான காலநிலையுடன் கூடிய மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
Post a Comment