Header Ads



ரோஹின்யர்களிடம் இனவாதிகள் வீரத்தை காண்பித்தமை, முழுநாட்டிற்கும் அபகீர்த்தி - மனோ கனேஷன்

-எம்.எல்.எஸ்.முஹம்மத்-

கடந்த காலங்களில் எமது நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கவாதப் பிரச்சினைகளாலும் இன முரண்பாடுகளினாலும் நாம் பல உயிர்களையும் உடமைகளையும் இழந்தோம்.நானும் எனது உற்ற நண்பர்கள் இருவரை இழந்தேன் .ஒருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் லஸன்த விக்ரமதுங்க மற்றொருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடறாஜா. எனக்கும் பயங்கரவாத உயிர் அச்சுறுத்தல்கள் இருந்தன.அன்று என்னை எனது பாதுகாப்பை முன்னிட்டு அமெரிக்காவுக்கும் ஜரோப்பிய நாடுகளுக்கும் வருமாறும் அழைத்துக் கொண்டிருந்தனர்.ஆனால் நான் இந்த மண்ணுக்கு எனது உயிரிழந்த நண்பர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு வெளிநாடு செல்லவில்லை .இந்த நாட்டில்  உள்ள சகல இனங்களுடனும் ஒற்றுமையுடன் வாழத் தெரியாதவர்கள் வாழ முடியாதவர்கள் இந்து சமுத்திரத்திற்குச் சென்று தாராளமாக    பாயுங்கள்.உங்களின் இழப்பை நாங்கள் பொறுப்படுத்த மாட்டோம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் தேசிய அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கனேஷன் நேற்று (1) இரத்தினபுரியில் தெரிவித்துள்ளார்.

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால்  நடத்தப்பட்ட 12 நாட்கள் 108 மணித்தியாலங்கள் கொண்ட தமிழ் மொழி பயிற்சி செயலமர்வை நிறைவு செய்து கொண்ட இரத்தினபுரி மாவட்ட அரச ஊழியர்கள் 500 பேருக்கு மொழிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மனோ கனேஷன் மேற்கண்டவாறு தெரிவித்தார் . மேற்படி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (1)இரத்தினபுரியில் அமைந்துள்ள மஹிபால ஹெரத் மத்திய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் மனோ கனேஷன் மேலும் அங்கு உரையாற்றும் போது,

 அண்மையில் பல துன்பங்களின் பின் அகதிகளுக்கான ஜக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பிரிவின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு வருகைதந்துள்ள   மின்யன்மார் முஸ்லிம் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் கல்கிஸ்ஸ வீட்டை இந்நாட்டில் உள்ள இனவாதிஙள் சிலர்  சுற்றி வளைத்து அவர்களிடம் தமது வீரத்தை காண்பிக்க முயற்சித்தனர்.இந்நிகழ்வு முழு இலங்கை நாட்டின் நற்பெயருக்கும் மிகப் பெரிய அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த அகதிகள் உண்மையிலேயே அகதிகளாகவே இலங்கை வந்துள்ளனர்.ஆனால் கடந்த காலங்களில் எமது நாட்டைச் சேர்ந்த பலர் பொய்களைக் கூறி பல ஜறோப்பிய நாடுகளில் அகதிகள் என்ற பெயரில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர் .ஆனால் உண்மையிலே அவர்கள் அகதிகள் அல்ல.

எமது நாட்டில் உள்ள இனவாதிகள் போன்று ஜறோப்பிய நாடுகளில் உள்ளவர்களும் அங்கு குடியேறியுள்ள இலங்கையர்களை வெளியேற்றுமென்றால் இத்தாலியிருந்தும் அவுஸ்திரேலியாவிலிருந்தும் பல கப்பல்களில்  அவர்களை கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படும் .இதை மறந்துதான் இந்நாட்டில் உள்ள இனவாதிகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

தேசிய ஒற்றுமை சகவாழ்வு ஜக்கியம் பற்றி முதலில் படிக்குமாறு நான் இந்த நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க விரும்புபவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் .அவர்களுக்கு இலங்கையில் உள்ள சகல இனங்களுடனும் ஒற்றுமையாக வாழ முடியாவிட்டால் இந்து சமுத்திரத்தில் தாரளமாக பாயுமாறும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார் .

மேற்படி நிகழ்வில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் ஷமின்த அருனதேவ மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் உரை நிகழ்த்தினர்.

1 comment:

Powered by Blogger.