பாரிய அரசியல் சூழ்ச்சிதாரர்கள் உள்ளனர், பின்னணியில் பாரிய குற்றவாளிகள்
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ஷலீல முனசிங்கவின் பின்னணியில் பாரிய அரசியல் சூழ்ச்சிதாரர்கள் உள்ளனர், லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ஷலீல முனசிங்கவின் பின்னணியில் ரவி கருணாநாயக்க சம்பந்தப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்துகின்றது. சர்வதேச நிதியினை விசாரணையின்றி வங்கி பரிமாற்றத்துக்கு அனுமதி கொடுத்தது யார்? லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவராக்கியது யார் என்பதை கண்டறிய வேண்டும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போது கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
முன்னைய அரசாங்கம் இலங்கையில் பணத்தினை கொள்ளையடித்து சர்வதேச வங்கிகளில் சேகரித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் சர்வதேச வங்கிகளில் இருந்து பணத்தினை கொள்ளையடித்து இங்கு சேர்க்கின்றனர். ஆக இந்த இரண்டு அரசாங்கமும் வங்கி விடயத்தில் ஒடுமையாக உள்ளனர்.
எனினும், சர்வதேச ரீதியிலான பாரிய நிதி மோசடியாகும். இதில் அந்த நாட்டின் சட்டத்துக்கும் நாம் கட்டுப்பட வேண்டும். ஆனால், இப்போது கைது செய்யப்பட்டுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ஷலீல முனசிங்க முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் நெருங்கிய நண்பர். இவரை லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவராக்கியது யார் என்பதை கண்டறிய வேண்டும். அதேபோல் இவ்வளவு தொகையினை விசாரணையின்றி வங்கி பரிமாற்ற அனுமதி கொடுத்தது யார் இப்போதும் அவர் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவராக உள்ளார். உடனடியாக இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதில் ஒரு சிலர் மட்டுமே தொடர்பு பட்டவர்கள் அல்ல. இதன் பின்னணியில் பாரிய குற்றவாளிகள் உள்ளனர். அவர்களை கண்டறிய வேண்டும் என்றார்.
Post a Comment