சிறைச்சாலைக்குள் கைதியை கொலை செய்தவருக்கு மரண தண்டனை
மஹர சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்த போது கைதி ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றசாட்டுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு கம்பஹா நீதிமன்றம் இன்று (17) மரணத் தண்டனை விதித்தது.
கல்னேவ பகுதியைச் சேர்ந்த ஹேரத் முதியன்சலாகே காமினி(25) என்பவருக்கே இவ்வாறு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் கைதிகள் சகிதம் “கரம்” விளையாடிய போது ஏற்பட்ட பிரச்சினையின் போது குறித்த நபர் அருகில் இருந்த கைதியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
Post a Comment