அணியில் புறக்கணிப்பு, பாகிஸ்தான் வீரர் தற்கொலைக்கு முயற்சி
அணியில் தெரிவு செய்ய மறுத்ததாலும், லஞ்சம் கேட்டதாலும் மனமுடைந்த இளம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மைதானத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பாகியுள்ளது.
குலாம் ஹைதர் அப்பாஸ் என்ற வலது கை வேகப்பந்து வீச்சாளர் லாகூர் நகர கிரிக்கெட் சங்க மைதானத்துக்குள் திடீரென புகுந்தார்.
அங்கு முதல்தர கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றிகொண்ட அப்பாஸ் தற்கொலைக்கு முயன்றார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்கள். பின்னர் அப்பாஸ் கூறுகையில், அதிகாரிகள் தனக்கு ஏகப்பட்ட பொய் வாக்குறுதிகளை அளித்ததாகவும் லாகூர் அணிக்கு தெர்வு செய்யப்படுவேன் என என்னை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கிளப் போட்டிகளில் நன்றாக விளையாடினாலும் தான் ஏழை என்பதால் தன்னை புறக்கணிப்பதாகவும், அணிக்கு ஆட வேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்துவதாகவும் அப்பாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே விரக்தியடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும், தனது புகார்களை பரிசீலிக்கவில்லையெனில் கடாஃப் மைதான வாயிலில் தீக்குளிப்பேன் என்றும் மேலும் அச்சுறுத்தியுள்ளார்.
Post a Comment