காணாமல் போன தாயும், மகளும் குறித்து பொலிஸார் பாராமுகம்
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் காணாமல் போன தாய் மற்றும் சேய் தொடர்பில் ஹிதோகம காவற்துறையினர் பாராமுகமாக செயற்பட்டு வருவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
அநுராதபுரம் ஹிதோகம பகுதியில் கடந்த 24 ஆம் திகதி சலவை தூள் வாங்குவதற்கு தனது மகனை சுமந்துக்கொண்டு வந்த சாரிக்கா குமாரி ஜயரத்ன என்ற இளம் தாய் அந்த தருணத்திலிருந்து தனது மகனான நந்துன் தத்மித்திர ஆகேஷ் உடன் காணாமல் போயுள்ளார்.
எனினும் ஹிதோகம் காவற்துறையினர் இதுவரையில் எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் காணாமல் போயுள்ள குறித்த பெண்ணின் தாயாரான காந்திலத்தா காவற்துறையிடம் சென்று வினவிய போதும் காவற்துறையினர் கவனம் செலுத்துவதில்லை என அவர் தெரிவிக்கின்றார்.
காணாமல் போயுள்ள குறித்த இளம் தாய் மற்றும் அவரது குழந்தையின் புகைப்படங்கள் கீழே காணப்படுகின்றது.
இவர்களை அடையாளம் காண்பவர்கள் ஹிதோகம காவல் நிலையத்திற்கு அறியத்தருமாறும் காணாமல் போன தாயின் அம்மாவான காந்திலத்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment