கொழும்பில் ரோஹின்யர்களுக்கு இன்னல் விளைவித்தவர்கள், பல குற்றங்களுடன் தொடர்புடையவர்கள்
கல்கிஸ்ஸ பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் புகழிட கோரிக்கையாளர்களுக்கு இன்னல் விளைவித்ததாக தெரிவிக்கப்படும் மேலும் இருவர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களில் இருவர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை , சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு பிரிதொரு நபருக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் , மற்றுமொருவர் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு தாக்குதல் மேற்கொண்டு சொத்திழப்பை ஏற்படுத்தினார் என தெரிவித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு மற்றுமொருவர் பாணந்துறை மகளீர் வித்தியாலய அதிபருக்கு கடமையை செய்யவிடமால் இடையூறு ஏற்படுத்தியதாக தெரிவித்தும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மியன்மார் புகழிட கோரிக்கையாளர்களின் முகாம்களுக்கு அருகில் பதற்றத்தை தோற்றுவித்த மற்றுமொரு சந்தேகநபர் கிருலப்பனை பூர்வாராம விகாரையிலுள்ள அரம்பேபொல ரத்னசார தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் , சம்பவத்துடன் தொடர்புடைய பலர் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள காவற்துறையினர் , குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் அறியும் பட்சத்தில் 071 8591727 என்ற தொலைப்பேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Post a Comment