எஸ்கேப் ஆகுவது ஏன், என்ற கேள்வியால் சூடாகிய ராஜித
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வராந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களுக்கும் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கும் இடையில் வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டது.
இதற்கமைய, ஒவ்வொரு சம்பவம் தொடர்பிலும் ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்படுகின்ற வினாக்களுக்கு விசாணைகள் இடம்பெறுகின்றது என்றே பதிலளிக்கின்றீர்கள், ஆனால் விசாரணைகளின் இறுதியில் என்ன நடந்ததென்று நீங்கள் கூறியதில்லை.
இதற்கு என்ன காரணம் என வினவப்பட்டது.
இதன்போது கோபமுற்ற அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உங்களுக்கும் முடியுமல்லவா? முடிந்தால் தேசிய காவற்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுங்கள் என கடுமையான தொனியில் கூறினார்.
அம்பாந்தோட்டையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்தின் போது ஏ எஸ் பி துஷார தழுவத்த ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தினார், ஆகையினால் அவர் கைது செய்யப்பட வேண்டியவர் அல்லவா என வினவப்பட்டது.
அந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என தெரிவித்து பிரிதொருவரின் கேள்விக்கு பதிலளிக்க தயாராகினார் அமைச்சர்.
இதன்போது குறுக்கிட்ட முன்னைய வினாவிற்குரிய செய்தியாளர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விசாரணைகள் இடம்பெறுகின்றது என தெரிவித்தே அமைச்சர் எஸ்கேப் ஆகுவது ஏன் என வினவினார்.
இதன்போது கோபமுற்ற அமைச்சர், உங்களுக்கும் முடியும், தேசிய காவற்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளார்.
அத்துடன் தாம் வைத்தியராக கடமையாற்றிய போதும் ஆர்பாட்டங்களில் பங்கேற்றுள்ளேன்.
அப்போது காவல் துறையினர் என்மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
ஆனால் நான் அதனை வைத்தியரை தாக்கியதாக கருதவில்லை, காரணம் குறித்த ஆர்பாட்டத்தில் தாம் அரசியல்வாதியாகவே பங்கேற்றேன்.
அதற்கமைய, குறித்த ஊடகவியலாளர் பதாதைகளை (போஸ்டர்) காட்சிபடுத்துவதற்கு (ஒட்டுவதற்கு) ஏன் சென்றார்.
அவ்வாறெனில் அவர் அந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர் அல்ல.
அவர் ஆர்பாட்டக்காரர்களில் ஒருவராவார் எனவும் குறிப்பிட்டார்.
Post a Comment