Header Ads



மலேசியாவில் இலங்கையரின் உடல் மீட்பு

மலேசியா Jalan Gombak Lama பகுதியில் இலங்கையரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் கால்கள் மற்றும் தலை சாக்கினால் மூடப்பட்ட நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மலைப்பகுதியில் இந்த சடலம் மீட்கப்பட்டு சில மணித்தியாலத்தில் 26 மற்றும் 51 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Gombak பொலிஸ் தலைமை அதிகாரி Ali Ahmad தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் சனிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலமாக மீட்கப்பட்டவர், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அட்டை வைத்திருக்கும் 32 வயதான இலங்கையர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது உடலில் குத்தப்பட்டிருந்த பச்சையினை வைத்து, அவரது மலேசியா மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.

15 மீற்றர் உயரத்திலிருந்து இந்த நபரின் சடலம் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் கடுமையான காயம் காணப்பட்டுள்ளதாகவும், கனமான பொருள் ஒன்றினால் அவர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.