ரோஹின்ய முஸ்லிம்கள் பற்றிய, உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன்?
கல்கிசையில் ரோஹிங்யா முஸ்லிம்கள் தங்கவைக்கப்பட்டிருந்த குடியிருப்பை சுற்றி வளைத்து அத்துமீறல்கள் இடம்பெறலாம் என தேசிய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தும், அவ்வாறான நிலைமையை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிய வருகின்றது.
கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி, பிக்குகள் தலைமையிலான குழுவினர் கல்கிசையில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றினை சுற்றி வளைத்து ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் கட்டடம் மீது தாக்குதல் நடத்தியும் கொலை அச்சுறுத்தல் விடுத்தும் அத்துமீறல்களை புரிந்தனர்.
எனினும் அந்த சம்பவத்துக்கு இரு நாட்களுக்கு முன்னர் இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கை ஒன்றுக்கு ஒரு குழுவினர் தயாராவது குறித்து தேசிய உளவுத் துறை பாதுகாப்புத்துறையை எச்சரிக்கை செய்துள்ளதாக அறிய முடிகின்றது. எனினும் அதனை தடுப்பதற்கு பாதுகபபு பிரிவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதனையும் முன்னெடுக்காமை தொடர்பில் பாதுகாப்பு ஆய்வாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
Post a Comment