எங்களை அல்லாஹ் காப்பாற்றுவான் - ரோஹின்ய சகோதரியின் அசைக்கமுடியாத நம்பிக்கை
மியான்மர் ராணுவத்தினரால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமைகள் கண்ணீரை வரவழைக்கின்றன.
பெண்களை பாலியல் ரீதியாக தாக்குவது, சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காமல் கொன்று குவிப்பது என ராணுவத்தினர் கொடூர செயல்களை புரிந்தனர்.
இந்நிலையில் மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் வசித்த ரொக்சரா தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறுகையில்,
எங்கள் நாட்டை விட்டு வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்த நாளிலிருந்து குரானை ஓதி வருகிறேன்.
என் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன், எங்களை அல்லாஹ் காப்பாற்றுவார்.
எங்கள் நாட்டில் சொந்தமான நிலம் உண்டு, தாய்நாட்டை மிகவும் நேசிக்கிறோம்.
நள்ளிரவில் என் கணவரை ராணுவத்தினர் கொன்றுவிட்டனர், இதனால் குழந்தைகளுடன் வங்கதேசத்திற்கு வந்தேன்.
ஐந்து நாட்கள் உணவே இல்லாமல் கஷ்டப்பட்டோம், முகாமில் இருப்பதும் எளிதான காரியமல்ல.
இங்கே என் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கிறது, தங்க இடமளித்த வங்கதேச மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
Post a Comment