Header Ads



பேருந்து சாரதிகளுக்கு எதிராக, முறைப்பாடு செய்ய அழையுங்கள்

உரிய நேர அட்டவணைக்கு ஏற்ப செயற்படாத பேருந்து சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை எச்சரித்துள்ளது.

அதிகாரசபையின் பொது முகாமையாளர் ஜெகத் பெரேரா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மேல்மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் உரிய கால அட்டவணையை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன, இது தொடர்பில் முறைப்பாடுகளும் கிடைத்து வருகின்றன.

இந்தநிலையில், சாரதிகள் தமது தூரங்களை உரிய நேர அட்டவணைக்குள் அடையவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இதன்போது பேருந்து சேவைகளை சிறப்பாக நடத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இனிவரும் காலத்தில் உரிய கால அட்டவணைக்குள் செயற்படாத சாரதிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தரப்படவுள்ளதாகவும் ஜெகத் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான முறைப்பாடுகளை பயணிகள், 0115559595 அல்லது 0112871353 அல்லது 0112871354 என்ற இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரசபையின் பொதுமுகாமையாளர் ஜெகத் பெரேரா அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.