Header Ads



விசேட நீதிகள் எதுவும் இல்லை, நாட்டில் ஒரு சட்டமே உள்ளது - பூஜித்

“நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அனைவருக்கும் எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.  

மேலும், “வடக்குக்கு ஒரு நீதியும் தென் மாகாணத்துக்கு ஒரு நீதியும் என இரண்டு விசேட நீதிகள் எதுவும் இல்லை. இந்நாட்டில் ஒரு சட்டமே உள்ளது.  

“இந்தக் காரணத்தால் தெற்கு மக்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்ததைப் போன்று விரைவில் சிவாஜிலிங்கத்துக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.  

கொழும்பில், இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.