மனோ கணேசனிடம் பாடம் கற்கவேண்டிய, முஸ்லிம் அரசியல்வாதிகள்
நுவரெலிய மாவட்டத்தில் புதிய பிரதேசசபையை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறியினால், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் வகையில், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்படும் என்று அரசாங்கம் கூறியிருந்தது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னரே தேர்தல் ஆணைக்குழுவினால் வேட்புமனுக்களைக் கோர முடியும்.
இந்த நிலையில், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரங்களை உள்ளடக்கிய சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
நுவரெலிய மாவட்டத்தில் உள்ள அம்பேகமுக பிரதேசசபையை பிரிக்க வேண்டும் என்று மனோ கணேசன் தலைமையிலான மலையக கட்சிகளின் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.
அரசாங்கம் இதற்கு இணக்கம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வர்த்தமானியை வெளியிடக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சின் செயலர் கமல் பத்மசிறி,
“நுவரெலிய மாவட்டத்தில் அம்பேகமுவ பிரதேச சபையை உருவாக்குவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதனை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். பல பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
நுவரெலிய மாவட்டத்தில் அம்பேகமுவ, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட பிரதேசமாகும். அதிகளவு மக்கள் தொகை கொண்ட பாரிய தனியொரு பிரதேச செயலர் பிரிவு. எனவே இதனைப் பிரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோருகின்றன. அதனைக் கவனத்தில் கொண்டுள்ளோம். வர்த்தமானியில் திருத்தங்கள் செய்வதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக உள்ளூராட்சி சபைகளின் வாக்களிப்பு பிரிவு ஒன்றில் சுமார் 50 ஆயிரம் வாக்காளர்களே இருப்பர். ஆனால், அம்பேகமுவவில், 2012 சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி 205,723 பேர் வசிக்கின்றனர். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களான ஹக்கீம், றிசாத், பைசர் முஸ்தபா என சிலர் சாயந்தமருதுவுக்கு தனி பிரதேச சபை பெற்றுக்கொடுக்கப்படும் என சில வருடங்களாக மக்களை ஏமாற்றிவரும் நிலையில், மனோ கணேசன் தலைமையிலான கட்சி தற்போது புதிய பிரதேசசபை விடயத்தில் வெற்றியை நோக்கி நகர்வதும், அதனால் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில்கூட தாமதம் ஏற்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மனோ கணேசன் போன்றே அரசியல் தலைவர்கள் இருக்க வேண்டும்.
ReplyDeleteபுதிதாக உள்ளூராட்சி சபைகளை உருவாக்குதல், தொழினுட்பக்கல்லூரிகளை உருவாக்குதல், புதிய பிராந்திய காரியாலயத்தை உருவாக்குதல், பல்கலைக்கழகம் உருவாக்கல், இரு உள்ளூராட்சி சபைகளுக்கிடையிலான நில ரீதியான பிணக்குக்கு தீர்வு காணல், ஆயிரக்கணக்கில் தொழில் வாய்ப்புக்களை வழங்கல். இவைதான் சாதனை அரசியல்.
மாறாக,
பாடசாலைக்கட்டடம் கட்டுவது, றோட்டுப்போடுவது, 4 அல்லது 5 பேருக்கு தொழில் கொடுப்பது போன்ற அபிவிருத்தி (அரசியல்) மட்டும் செய்வது ஜுஜுபி அரசியல் வாதிகள்.
நக்குண்டார் நாவிளந்தார் என்பார்கள். அரசியலில் கோடி கோடியாக பேரம் பேசி பணத்தினைப் பெற்றால் உரிமைகளைப் பெற முடியாது.
மனோ கணேசன் அவர்களது சிறிநீர் பருக்கப்படவேண்டிய சில கட்சித்தலைவர்களும் நமது நாட்டில் உள்ளனர்.
முஸ்லிம்கள் தான் பாடம் கற்ற வேண்டும்.
ReplyDeleteஅரசியல்வாதிகள் என்ன வானத்தில் இருந்து குதித்தா வருகின்றனர்?, மக்களிலிருந்து தானே.