'முடிந்தால், மோதிப் பார்'
நடப்பு அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் நேருக்கு நேர் விவாதம் ஒன்றிற்கு வருமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவிற்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவே இந்த சவாலினை விடுத்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இந்த சவாலினை விடுத்துள்ளார்.
அத்துடன் இந்த நிகழ்ச்சியின் போது மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹன விஜயவீரவின் கொள்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment