இலங்கையும் செல்வந்த நாடாக வாய்ப்பு..?
மன்னார் கடற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை எரிவாயு வைப்புகளை 2021 ஆண்டில் எரிபொருளாக தாயரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெற்றோலிய ஆய்வு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் போது பெற்ரோலியம் வள மேம்பாட்டு செயலகம் இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 2018 ஆம் ஆண்டில், இயற்கை எரிவாயு வைப்புகளுக்கு உற்பத்தி அனுமதி பத்திரங்கள் வழங்கப்படும்.
மன்னார் கடற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை வாயு வைப்புகளில் சுமார் 2 மில்லியன் கலன்கள் இயற்கை எரிவாயு மற்றும் 10 மில்லியன் திரவ எரிவாயு பீப்பாய்கள் உள்ளதாக நம்பப்படுகிறது.
மன்னார் கடற்படுகையின் 4442 அடி ஆழத்தில் எரிவாயு உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் எரிவாயு மட்டுமல்லாமல் கனிய எண்ணெய் வளமும் உள்ளமை ஆய்வின் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி மூலம் இலங்கையின் எரிபொருள் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக பல பில்லியன் டொலர்கள் வருடாந்தம் செலவிடப்படுகிறது.
மன்னார் கடற்படுகையில் எரிபொருள் உற்பத்தி வெற்றிகரமாக ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், இலங்கையின் எரிபொருள் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.
இதன்மூலம் இலங்கையும் எதிர்காலத்தில் செல்வந்த நாடாகும் வாய்ப்பு உள்ளதாக பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேர்தல் நெருங்கும்போது சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் மன்னாரில் பெற்றோல் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக ஒரு பாழ்கிணற்றில் பெற்றோல் பீப்பாயைக் கொண்டு போய் ஊற்றிவிட்டு அடுத்த நாள் நாளாந்தப் பத்திரிகைகள் அனைத்திலும் தலைப்புச் செய்தியாக வந்தது இலங்கையில் இப்போது பெற் றோல் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட செய்து. அதே வரலாறு மீண்டும் தொடர்கிறது. எனவே வாசகர்களே இந்த படுபொய்யை நம்மிவிடவேண்டாம். பல கோடி செலவு செய்து இலங்கையின் வடக்கில் பெற்றோல் கண்டுபிடிக்க கொன்ரக் கொடுக்கப்பட்ட இந்தியன் கம்பனி அங்கு ஆய்வில் பயனில்லை என அண்மையில் படு நட்டத்துடன் திரும்பிச் சென்றது. இதுதான் உண்மை. இது தேர்தல் 'உண்மை' என்பதை விளங்கிவைத்தால் போதும்.
ReplyDelete