Header Ads



பாகிஸ்தான் அணியில், குமார் சங்கக்கார


பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 20 இற்கு 20 கிரிக்கட் தொடரில் இணையவுள்ள புதிய அணி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த புதிய அணியில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவும் இணைந்துக்கொண்டுள்ளமை இலங்கை கிரிக்கட் ரசிகர்கள் மத்தியில் பாரிய மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியில் குமார் சங்கக்கார கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.

எனினும் அவர் குறித்த அணியின் தலைவராக செயற்பட்ட போதிலும் அணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் புதிதாக இணையவுள்ள அணியின் பெயர் Multan Sultans என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் Shoaib Malik, Kieron Pollard , Sohail Tanvir , Mohammad Irfan , Junaid Khan , Sohaib Maqsood, Irfan Khan ,Kashif Bhatti ஆகியோர் பங்கேற்றுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அணியின் வேறு சில பொறுப்புக்களும் குமார் சங்கக்காரவிற்கு வழங்கப்பட்டுள்ளதோடு அணியின் ஆலோசகராகவும் செயற்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.