அமெரிக்காவை அழிக்க, வடகொரியாவிடம் உள்ள திட்டம்
வடகொரிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள அணுசக்தி மின்காந்த அலைகள் அணுகுண்டால் அமெரிக்காவின் 90 விழுக்காடு பகுதியை வரைபடத்தில் இருந்து துடைத்து நீக்க முடியும் என போர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட நிபுணர்கள், அணுசக்தி மின்காந்த அலைகளை பயன்படுத்தி வடகொரியா அமெரிக்காவின் மின்சாரம் மற்றும் மின் சாதனங்களை முதலில் செயலிழக்கச் செய்யும்.
மட்டுமின்றி நவீன தொலைத்தொடர்பு கருவிகள் அனைத்தும் இதனால் செயலிழந்து தனிமைப்படுத்தப்படும் சூழல் முதலில் உருவாகும்.
இதனால் நாடே ஸ்தம்பிக்கும், இந்த தருணத்தை பயன்படுத்தி கொடூர தாக்குதலை முன்னெடுக்க வடகொரியா திட்டமிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் EMP எனப்படும் இந்த அணுசக்தி மின்காந்த அலைகளின் தாக்குதலில் 90 விழுக்காடு அமெரிக்க குடிமக்கள் மறைமுகமாக உயிரிழக்க நேரிடும் எனவும்,
பறந்துகொண்டிருக்கும் விமானங்கள் கட்டுப்பாட்டை இழக்கும், ரயில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும், பயணத்தில் இருக்கும் ரயில்கள் கட்டுப்பாட்டை இழக்கும் என கற்பனைக்கும் எட்டாத துயரங்கள் நிகழும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி அமெரிக்காவில் உள்ள EMP கமிஷனில் பொறுப்பு வகிக்கும் Dr William R Graham மற்றும் Dr Peter Vincent Pry ஆகியோர் இணைந்து வழங்கியுள்ள அறிக்கையில், ஏவுகணை தாக்குதல் நடவடிக்கை என்பது வடகொரியாவின் நோக்கமாக இருக்காது.
யுத்தம் என ஒன்று துவங்கினால் அதை மிக விரைவில் முடித்துக் கொள்ளும் முனைப்புடனே வடகொரியா செயல்படும். இதனால் அணுசக்தி மின்காந்த அலைகளின் தாக்குதல்களையே அவர்கள் முயற்சிக்க வாய்ப்பு என தெரிவித்துள்ளனர்.
இதனால் அமெரிக்க நிர்வாகம் மிக முக்கியமாக இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து குடிமக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளில் உடனடியாக களம் காண வேண்டும் என குறித்த நிபுணர்கள் இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அமெரிக்காவை குறிவைத்து 2 செயற்கை கோள்களை வடகொரியா நிறுத்தியுள்ளதாகவும், தேவை எழும்போது அந்த இரு செயற்கை கோள்களில் இருந்தும் அணுசக்தி மின்காந்த அலைகளின் தாக்குதலை வடகொரியா தொடுக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
ReplyDeleteஇஸ்லாமிய அடிப்படையில் யுக முடிவு என்பது 10 பெரிய அடையாளங்கள் நடந்த பின்னர் ஏற்படுவதாகும். எனவே மிக கிட்டிய காலத்தில் இது சாத்தியமில்லை எனலாம்.
ReplyDeleteஇருப்பினும் உயர்தொழினுட்பத்தினூடாக ஆயுதங்களை உற்பத்தி செய்து சண்டித்தனம் காட்டிவரும் பயந்தான்கொள்ளிகளான அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் மேற்குலகு தொழிநுட்பங்களை இழக்கும் போது ஓடி ஒளியும் நிலையை ஏற்படுத்தும்.
இந்நிலையில் நிராயுதபாணிகளாக முஸ்லிம்களை எதிர்கொள்ள முடியாது சரணாகதியடையச்செய்யும். இது முஸ்லிம்கள் தொடர்பில் மற்றைய அனைவருக்கும் பொதுவான நிலையாகும்.
இந்நிலையை ஏற்படுத்துவதற்கான நகர்வுகளை இறைவன் வடகொரியாவை வைத்து கனகச்சிதமாக மேற்கொள்ளுகிறான் என்ற ஊகம் என்னுள் ஏற்படுகிறது.
யுக முடிவும் - பூமியின் அழிவும் வேறு வேறு பரிமாணங்களைக் கொன்டதாகும்.
ReplyDeleteபூமி அல்லது பூமியின் ஒரு பகுதி அழிவதனால் அண்டத்தில் ஏதும் மாற்றம் ஏற்படப்போவதில்லை.
@Lafir, மகிந்த ராஐபக்ஷ புதிய சோதிடக்கார்ர் ஒருவரை தேடுகிறாராம். அப்பிளை பண்ணி பாருங்கோ.
ReplyDeleteவடகொரியா உலகின் உதவியை முழுமயாக நம்பியிராமல் சுயமாக செயெல்பட்டு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆனால் தாராளமான வளமும் பணமும் நிறைவாகவுள்ள இஸ்லாமிய நாடுகள் முதுகெலும்பில் பலமில்லாமல் ஆட்டுக்கறியை உண்டு பெப்ஸியையும் குடிப்பதுதான் வாழ்க்கைஎன கிடக்கின்றன!!!
ReplyDelete