"ஜனாதிபதி இறங்கி வந்து, பேசியதென்பது பெரிய விடயம்"
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி இறங்கி வந்து பேசியதென்பது பெரிய விடயம் கடந்தகால ஜனாதிபதியாக இருந்திருந்தால் அவ்விடத்தில் தடியடிப்பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் அல்லாதவிடத்து நான்குபேரையாவது இழுத்துக் கொண்டு செல்லும் நடவடிக்கைதான் நடந்திருக்கும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிறைக்கைதிகள் தொடர்பான போராட்டத்தின் போது ஜனதிபதி அவ்விடத்திற்கு சென்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது பேச்சுவார்த்தைக்கு வர மறுத்தமை தொடர்பில் கருத்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடரப்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள எந்தவொரு பிரச்சினையையும் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் சரியோ பிழையோ பேசித் தீரக்கவேண்டும். பேச்சுவார்த்தையில் வெற்றியேற்படலாம் அல்லது தோல்வி ஏற்படலாம். அல்லது பின்னடிப்புக்கள் ஏற்படலாம் இதனை நாங்கள் இராஜதந்திர ரீதியாக பாரக்கின்றபோது எந்த பிரச்சினையையும் பேசித்தான் தீர்க்க வேண்டும்.
குறித்த விடயம் தொடர்பாக கஜந்திரகுமார், சுரேஸ்பிறேமசந்திரனின் கருத்திற்கும் சிவாஜிலிங்கத்தின் கருத்திற்கும் பல வித்தியாசங்கள் இருந்து கொண்டு வருகின்றது.
ஜனாதிபதி அழைத்தவேளை பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்தால் ஒரு தீர்வு வந்திருக்கும் என்று ஒருவேளை நினைக்ககூடும் எந்தவொரு பிரச்சினைக்குமான தீர்வு வீதியில் கிடைக்கபோவதில்லை. உண்மையில் ஜனாதிபதி சரியோ பிழையோ அவர் அந்த இடத்தில் இறங்கி வந்ததென்பது ஒரு பெரிய விடயம் கடந்த கால ஜனாதிபதி இருந்திருந்தால் குறித்த இடத்தில் தடியடிப்பிரயோகம் மற்றும் நீர்ப்பிரயோகம் அல்லாதவிடத்து நான்குபேரையாவது இழுத்துக் கொண்டு செல்லும் நடவடிக்கைதான் அவ்விடத்தில் நடந்திருக்கும்.
ஆகவே எங்களுக்கு கடந்தகாலத்தைவிட தற்போது ஆட்சியில் கிடைத்திருக்கும் இவ்வாறான உரிமைகளை சாதுரியமாக பயன்படுத்தவேண்டும். அதனை விடுத்து எல்லாவற்றையும் நாங்கள் எதிர்மறையாக பாரத்து கொண்டு இருக்கமுடியாது. மறுவளம் பார்த்தால் இந்த ஜனாதிபதியிடம் பேசாது நாங்கள் இந்தியாவிடமா ? ஜக்கிய நாடுகள் சபையிடமா? பேசப்போகின்றோம். ஒட்டுமொத்தமாக பார்த்தால் கைதிகள் கூட பேச்சுவார்த்தை மூலம் தீர்வொன்றைபெறத்தான் எதிர்பார்த்திருப்பார்கள் அந்த வகையில் அவர்களின் எதிர்பார்ப்பினை முறியடிப்பதாகவே இச்செயற்பாடுகள் அமைந்துள்ளன.
IPPADIYELLAM PIDIWADHAM PUDICHITHAN PRABAKARAN SIR ILLAMAL POONAR.AVARU NAMMA NAATUKKU NALLA UDHARANAM GA .
ReplyDelete