Header Ads



அதிகாலையில் கட்டுநாயக்காவில், காத்திருந்த நைஜீரிய ஜனாதிபதி


நைஜீரிய நாட்டு ஜனாதிபதி மொஹமட் இசோபு திடீரென இலங்கை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார்.

நைஜீரிய ஜனாதிபதி பயணித்த விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கியுள்ளது.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் ஜனாதிபதி தங்கியிருந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியா பயணம் மேற்கொள்ளும் நைஜீரிய ஜனாதிபதியை அழைத்து வந்த விமானம், எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் இன்று -17- அதிகாலை 3.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. மீண்டும் அதிகாலை 5.40 மணியளவில் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் விமான நிலையத்தின் விசேட விருந்தினர் பக்கத்தில் நைஜீரிய நாட்டு ஜனாதிபதி தங்கியிருந்தார் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.