உலகின் மிகச்சிறந்த ஆசிரியையாக மேகி தெரிவு - ஒரு மில்லியன் டொலர் பரிசும் கிடைத்தது
உலகின் மிகச்சிறந்தஆசிரியையாக மேகி டெக்டோனால் என்பவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
வார்கி அறக்கட்டளையின்இந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது துபாயில் நடந்த விழாவில் மேகி டெக்டோனாலுக்குவழங்கப்பட்டுள்ளது.
கனடிய ஆர்டிக்பிரதேசத்தில் பணியாற்றும் இவர் சவாலான பணியை மேற்கொள்வதாக கூறுகிறார்.
மேலும் கூறுகையில்,
வகுப்பறை மட்டுமின்றி வெளியேயும் மாணவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும், அப்போது தான் எதார்த்தமான கல்வியை மாணவர்கள் கற்க முடியும், சமுதாயத்தில் இணைந்து கொள்வதும் எளிதானஒன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றிமேகி டெக்டோனாலுக்கு விழாவின் போது ஒரு மில்லியன் டொலர் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
உலகளவில் சிறந்தமுறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இவருக்கு கனடியபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment