கொழும்பிலிருந்து புறப்படும் ரயில்கள், ரத்தாகியதால் பெரும் அமளிதுமளி
கொழும்பிலிருந்து புறப்படுகின்ற அனைத்து ரயில் பயணங்களும் திடீரென இரத்து செய்யப்பட்டதால் புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்தில் பெரும் அமளி ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே திணைக்களத்திலுள்ள ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இந்த நிலையில் ரயில் பயணங்கள் தற்சயமத்திலிருந்தே இரத்து செய்யப்பட்டிருப்பதாக பயணிகள் கூறுகின்றனர்.
குறுந்தூர மற்றும் தூர இடங்களுக்குச் செல்கின்ற பயணிகள் தற்போது ரயில் நிலையத்தில் குழுமியிருப்பதோடு அதிகாரிகளுடன் பேசிவருவதாகவும் மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment