Header Ads



இந்துத்துவா குண்டர்களினால் படுகொலையான, தந்தையின் கனவை நிறைவேற்றிய மகள்


ஸைஃபி முஸாஃபர் நகர் உபி மாநிலத்தைச் சேர்ந்தவர்.  நான்கு வயதாக இருக்கும் போது, இவரது தந்தை இந்துத்வா குண்டர்களால் கொல்லப்பட்டார். இறப்பதற்கு முன் தனது மகளை நீதிபதியாக பார்க்க ஆசைப்படுவதாக தனது மனைவியிடம் சொல்லியுள்ளார்.

25 வருடங்களுக்கு பிறகு தந்தையின் கனவு நனவாகியது. தற்போது 29 வயதாகும் அஞ்சும் ஸைஃபி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு கொடுத்த பேட்டியில்,

'சிறு வயதில் எனது தந்தையை இழந்தேன். மிகுந்த சிரமத்தோடு எனது படிப்பை தொடர்ந்தேன். 40 வயதாகும் எனது அண்ணன் தில்சாத் அஹமது எங்களை கவனித்துக் கொண்டதால் இதுவரை திருமணமும் செய்து கொள்ளவில்லை.  எனது தந்தையின் கனவு இன்று நனவாகியது. சிவில் ஜட்ஜ் ஜூனியர் டிவிஷன் பரீட்சையில் நான் தேர்வாகியுள்ளேன்.' என்கிறார்.

ஹமீதா பேகம்: 'என் கணவர் இறந்து விதையை விதைத்து விட்டு சென்றுள்ளார். அந்த விதை இன்று மரமாகி அதன் பழங்களை நாங்கள் புசிக்கிறோம்' என்கிறார்.

இந்துத்வா குண்டர்களால் பாதிக்கப்படும் முஸ்லிம்கள் இவ்வாறு வெகுண்டெழுந்து சமூகத்தில் நல்ல நிலையை அடைந்து அவர்களின் முகத்தில் கரியை பூச வேண்டும். அவர்களுக்கு சரியான பதிலடி நாம் சமூகத்தில் முன்னேறி காட்டுவதே!

தகவல் உதவி
முஸ்லிம் மிர்ரர்

16-10-2017

2 comments:

  1. Anything possible under the sky if u have strong will n steel like
    reslove .

    Lazy guys plays blamegame passing the bug.
    MashaAllah.

    ReplyDelete

Powered by Blogger.