ஒரு தேங்காயின் அதிகபட்ச விலை 75 ரூபா - மீறினால் தண்டனை
தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 75 ரூபாவாக இருக்க வேண்டும். அதைவிட அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என தெங்கு உற்பத்திச் சபையின் தலைவர் கபில யகன்தவெல தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேங்காய் ஒன்றை நுகர்வோரிடம் சேர்க்கும் வரையிலான முழுச்செலவுகளையும் கருத்தில் கொள்கின்ற போது தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையினை எழுபத்தைந்து ஷரூபாவாக வரையறுத்துக்கொள்ள முடியும்.
இதேவேளை, சந்தையில் அதிகரித்துள்ள தேங்காயின் விலையை மட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் 75 ரூபா கட்டுப்பாட்டு விலையில் தேங்காயை சந்தைப்படுத்த பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நாளை முதல் ச.தொ.ச. விற்பனை நிலையங்களிலும், நடமாடும் தேங்காய் விற்பனை லொறிகளிலும் கட்டுப்பாட்டு விலையில் தேங்காயைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.
அரச தோட்டங்களிலிருந்து பெறப்படும் தேங்காய்கள் இவ்வாறு விநியோகிக்கப்படவுள்ளதாவும், தேங்காய் விலை 100 ரூபாவாக அதிகரித்துள்ளதனால் ஏற்பட்டுள்ள மக்களின் சுமையைக் குறைப்பதற்கே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment