4 வயது சிறுமி துஷ்பிரயோகம் 28 வயது இளைஞன் கைது
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை பகுதியிலுள்ள தோட்டப் பகுதியில் 28 வயதுடைய இளைஞன் ஒருவனால் 4 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் அக்கரப்பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியிடம் குறித்த நபர் ஆபாச படங்களையும் காட்சிகளையும் காட்டி சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Post a Comment