Header Ads



சம்பளம் வழங்காத எஜமான் - 3 மாத சிறையடைப்பின் பின்னர் இழப்பீட்டுடன் நாடுதிரும்பிய இலங்கையர்

சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து சிறைக்கு அனுப்பிய வீட்டு எஜமானிடம் இருந்து 7 இலட்சம் ரூபா இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெலிமடை - லந்தேகம இலக்கம் 37 என்ற முகவரியை சேர்ந்த எம். முஹம்மது ஹசீம் என்பவர் சவுதி அரேபியாவில் வீட்டு வாகன சாரதியாக தொழில் புரிய சென்றுள்ளார்.

கடந்த 15 மாதங்கள் அவருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

சம்பளத்தை கேட்ட போது வீட்டுக்கு எஜமான் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததன் காரணமாக மூன்று மாதங்களும் 11 நாட்களும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையருக்கு சம்பளம் வழங்கப்படாதது குறித்து அவரது உறவினர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், முஹம்மது ஹசீம் சிறையில் இருந்த போது, சவூதி அரேபிய தொழில் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் பின்னர் அவருக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளமான 18 ஆயிரத்து 850 ரியால் பணம் வழங்கப்பட்டுள்ளதுடன் தண்டனை காலம் முடிந்து அவர் நாடு திரும்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.