24 இலட்சம் வேண்டாம் - திருப்பிக்கொடுத்த பெண்
தமது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட 24 இலட்ச ரூபாவினை வேண்டாம் என திருப்பிக் கொடுத்த பெண் ஒருவர் பற்றி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாற்பது ஆண்டுகளாக சிறைச்சாலை திணைக்களத்தில் பணியாற்றிய எஸ்.ஏ. சோமலதா என்ற பெண்ணே இவ்வாறு தனது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட 24 லட்ச ரூபாவினை, வங்கியிடம் திருப்பி கொடுத்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்னதாக குறித்த பெண்ணின் வங்கிக் கணக்கில் 12 லட்சம் ரூபா பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் அது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக வங்கிக் கிளைக்கு செல்ல முயற்சித்த போது, மீளவும் 12 லட்சம் ரூபா பணம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த பெண் வங்கிக்கு சென்று முகாமையாளரை சந்தித்து தமது வங்கி கணக்கு மீதியை பரிசோதித்துள்ளார்.
அதன்போது 24 லட்சம் ரூபா பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள போகின்றீர்களா எனவும் வங்கி முகாமையாளர் பெண்ணிடம் வினவியுள்ளார்.
எனினும், குறித்த பெண் இந்தப் பணம் என்னுடையதல்ல எனக்கு தெரியாமலேயே பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் வங்கிக் கணக்கு பற்றி சோதனையிட்ட போது தவறுதலாக வேறு ஒருவரின் கணக்கில் வைப்புச் செய்யப்பட வேண்டிய பணம் இவ்வாறு வைப்புச் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் நேர்மையைப் பாராட்டி வங்கி முகாமையாளர் பாராட்டுக் கடிதமொன்றை வழங்கியுள்ளார்.
Post a Comment