Header Ads



நாட்டின்2 வது இதயமாற்று அறுவை சிகிச்சை செய்த 19 வயது யுவதி உயிரிழப்பு

இந்நாட்டின் இரண்டாவது இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 19 வயது யுவதி கண்டி பொது மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை இடம்பெற்று 4 நாட்களின் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த புதன் கிழமை இந்த யுவதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் , பின்னர் அவர் கண்டி பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சசினி செவ்வந்தி என்ற குறித்த யுவதிக்கு , கடந்த தினத்தில் கண்டி - புலியந்த பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த நலிந்த பண்டார் எனற் 28 வயது இளைஞரின் இதயம், இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

கண்டி போதனா மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சை கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வெற்றிகரமாக இடம்பெற்றிருந்தது.

எவ்வாறாயினும் , கடந்த 19ம் திகதி இடம்பெறவிருந்த இந்த யுவதியின் அறுவை சிகிச்சை இயந்திர உபகரண பற்றாக்குறை காரணமாக பிற்போடப்பட்டது.

பின்னர் , சுகாதார அமைச்சரின் தலையீட்டால் குறித்த அறுவை சிகிச்சை கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அலுத்கம - கலுவாமோதர - சங்கமித்தா மகளீர் வித்தியாலயத்தில் கல்வி கற்ற சசினியின் மூத்த சகோதரியும் இதய நோய் காரணமாக இதற்கு முன்னர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.