125 மில்லியன் இலஞ்சம் பெற்ற அதிகாரிகள் - நாட்டின் மிகப்பெரிய இலஞ்சம் என வர்ணிப்பபு
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுங்கத்துறை அதிகாரிகள் நால்வர் மீது, மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்ப்பட்டுள்ளன.
சுங்கத் துறையின் உதவி கண்காணிப்பாளர் உபாலி குணரத்ன பெரேரா, சுங்கத்துறை கண்காணிப்பாளர்கள் வசந்த விமலவீர, உபாலி விக்கிரமசிங்க, சுதீர ஜினதாஸ ஆகியோர் மீதே குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.
இலங்கை போக்குவரத்துச் சபைக்காகத் தருவிக்கப்பட்ட 1,500 மில்லியன் ரூபா பெறுமதியான உதிரிப் பாகங்களுக்கான வரியை விதிக்காமல் இருப்பதற்காக, 2015ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதி, 125 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாக இவர்கள் மீது பதினான்கு பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது, நாட்டின் மிகப்பெரிய இலஞ்சத் தொகையாகக் கருதப்படுகிறது.
Post a Comment