பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபா வரை உயர்வடைந்தது
உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. இதற்கமைய 40 ரூபாவாகவிருந்த ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 70 ரூபா முதல் 100 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தம்புளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்க்ள கூறியுள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் மீது 100 வீத வரியை விதிக்குமாறு ஜனாதிபதி அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் உள்நாட்டு பெரிய வெங்காயத்திற்கான கேள்வி அதிகரித்து விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment