ரோஹிங்யா முஸ்லிம்களை, நாங்கள் தாக்கியதை நிரூபிக்க முடியுமா? அக்மீமன தேரர் சவால்
ரோஹிங்யா அகதிகளை நாங்கள் தாக்கவில்லை. முடியுமானால் நாங்கள் அவர்களை தாக்கியதாக அரசாங்கம் நிரூபிக்கட்டும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார். சிங்கள ராவய அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
கல்கிஸை பிரதேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்தது. அதன் பிரகாரம் நாங்கள் அங்கு சென்று கல்கிஸை பொலிஸில் இது தொடர்பாக வினவினோம். ஆனால் பொலிஸார் இது தொடர்பாக எதுவும் தெரியாது என எங்களிடம் தெரிவித்தனர். அதன் பின்னர்தான் நாங்கள் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவர்களை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றுமாறு தெரிவித்தொம்.
அத்துடன் இவர்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் தங்கவைக்கப்படும் முகாமில் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்படியானால் அவர்கள் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்படவேண்டும். அவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும். அந்த இடத்தில் ஐக்கிய நாடுகளின் கொடி தொங்கவிடப்படவேண்டும். அவ்வாறு எதுவும் இங்கு இடம்பெறவில்லை.
மாறாக ரோஹிங்கியா அகதிகள் கல்கிஸை பகுதியில் சொகுசு மாடி வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பிள்ளைகள் பிரபல பாடசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். எமது பிள்ளைகளை அந்த பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதென்றால் அதற்கு பல நிபந்தனைகளை விதிப்பார்கள். அத்துடன் இவர்கள் பொலிஸாருக்கு தெரியாமல் இருப்பது பெரும் தவறாகும்.
அமைச்சர்களான ராஜித்த, மங்கள போன்றவர்கள் தெரிவிப்பதுபோன்று நாங்கள் அந்த மக்களை தாக்குவதற்கு செல்லவில்லை. அவர்களை அந்த இடத்தில் இருந்து அகற்றுமாறு தெரிவித்தே எமது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். என்றாலும் மாலை வரை பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் மக்கள் குழப்பமடைந்து செயற்பட்டனர். அவ்வாறு நாங்கள் அவர்களை தாக்கியதை அரசாங்கம் முடியுமானால் ஒப்புவித்து காட்டட்டும்.
மேலும் ரோஹிங்கியா இனத்தவர்கள் நாட்டில் இல்லை. அவர்களை வெளியேற்றியதாக அமைச்சர்கள் பகிரங்கமாக தெரிவித்து வந்தனர். அப்படியானால் இவர்கள் இருப்பது அரசாங்கத்துக்கும் தெரியாது, நாட்டின் புலனாய்வுத்துறைக்கும் தெரியாது. அரசாங்கம் செய்த தவறை மறைப்பதற்கே தேரர்களை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர் என்றார்.
We do not to answer this bloody dog. Go to hell.
ReplyDelete