Header Ads



நல்லாட்சியை அமைக்க செயற்பட்டவர்களால் ஏதாவது செய்ய முடிந்துள்ளதா? ஹரீன் மனதில் குழப்பம்

மனதில் பெரிய எதிர்பார்ப்புக்கள் பலவற்றை வைத்துக் கொண்டு அரசாங்கத்தை அமைக்க ஒன்றுபட்டோம். இருந்தபோதிலும், நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்நின்று செயற்பட்டவர்களால் ஏதாவது செய்ய முடிந்துள்ளதா? அல்லது குறை இருக்கின்றதா என்று தமது மனதில் சிறிய குழப்பநிலை தோன்றியிருப்பதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அடிப்படை வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். 

பண்டாரவளை சேர் ராசிக் பரீத் மகா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற (28) நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

"என்னுடைய இதயத்திலும் சிறிக கவலை இருக்கிறது. நானும் மனதில் பெரிய எதிர்பார்ப்புக்கள் பலவற்றை வைத்துக் கொண்டுதான் இந்த அரசாங்கத்தை அமைக்க செயற்பட்டேன். 

நேற்று ஜனாதிபதி வந்தார். ஜனாதிபதியின் முன்னிலையிலேயே நான் கூறினேன், அரசாங்கத்தை அமைத்தது நாம்.  இன்று அரசாங்கத்தை நடத்துவது வேறு ஆட்கள், அதுவும் பரவாயில்லை. ஆனால், எதிர்பார்ப்புடன் 

இருந்தவர்களால் ஏதாவது செய்ய முடிந்துள்ளதா? போதாதா? என்று மனதில் சிறிய குழப்பநிலை இருக்கின்றது" என்று அவர் கூறினார். 

இதேவேளை நேற்று முன்தினம் பதுளை வாகன தரிப்பிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் போது, பதுளையில் குடிநீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியிடம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பற்றி அமைச்சர் ஹரின் பெர்ணாந்தோ புகழ்ந்து பேசியுள்ளார். 

"பரவாயில்லை நாங்கள் அரசாங்கத்தை கொண்டு வந்தோம், தேவையானவரை நாம் தோற்கடித்தோம், 

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார், எமது முதலமைச்சர் சம்பத் சாமர தசநாயக்க மிகவும் சேவைகளை செய்கிறார், 

அமைச்சர் டிலான் சேவைகளை செய்கிறார், நான் திட்டு வாங்குகின்றேன், மாவட்டத்திற்கு சேவை நடப்பதே எனக்கு வேண்டும்." இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்ணாந்தோ கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.