ரோஹின்ய முஸ்லிம்களை பார்வையிட ஐ.நா. க்கு அனுமதி மறுத்தது மியன்மார்
மேற்கொள்ள இருந்த பயணத்தை மியன்மார் அரசாங்கம் இரத்துச் செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.
ரக்கின் மாகாணத்தில் பெருமளவிலான ரோஹிங்கிய முஸ்லிம்கள் வெளியேறிய விவகாரத்தில், அந்த மாகாணத்தை நேரில் பார்வையிட தாம் திட்டமிட்டிருந்தாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
எனினும், மியன்மார் இராணுவம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய நாடுகளின் பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் ரக்கின் மாகாணத்துக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
குறித்த பயணமானது அந்த பகுதிகளுக்கு முதல் முறையாக செல்லவிருக்கும் சுதந்திரமான மற்றும் பரந்த வாய்ப்பாக அமையுமென்று தாம் நம்புவதாக இந்த பயணம் இரத்து செய்யப்படுவதற்கு முன்னர் கடந்த கருத்து வெளியிட்டிருந்த ஐக்கிய நாடுகளின் செய்தித் தொடர்பாளர் ஸ்டிபன் டுஜாரிக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பயணம் இரத்துச் செய்யப்பட்ட விடயம் தொடர்பில் விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக் கூட்டம் நிவ்யோர்க்கில் விரைவில் கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment